Monday, December 23, 2024
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeநடப்புகள்நவசமாஜ் சாரிடபிள் சொசைட்டி சார்பில் அமைச்சரிடம் மனு

நவசமாஜ் சாரிடபிள் சொசைட்டி சார்பில் அமைச்சரிடம் மனு

நவசமாஜ் சேரிடபிள் சொசைட்டி சார்பில், மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, சுகாதாரம், அரசு வேலை வாய்ப்பு மற்றும் உரிமைகள் ஆகியவைகளை சட்டப்படி பாதுகாக்க முன்வரவேண்டும் என வலியுறுத்தி, அந்த அமைப்பின் தலைவர் பேராசிரியர் அன்பானந்தம் தலைமையில், தமிழக தலைமைச் செயலகத்தில், பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் துறை அமைச்சர் மெய்யநாதனிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சர், கோரிக்கைகள் குறித்து உரிய ஆலோசனை நடத்தி, அதன் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.முன்னதாக, அமைச்சர் மெய்யநாதனுக்கு, பொன்னாடை அணிவித்தும், மலர்க்கொத்து கொடுத்தும், புத்தகங்கள் வழங்கினர். இந்த நிகழ்வில், அமைப்புச் செயலாளர் பாலசந்தர், செயலாளர் பன்வார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு அமைச்சரிடம் மனு அளித்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!