நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் இம்மாதம் 06.12.2024 வெள்ளிக் கிழமை காலை 10.00 மணிக்கு “மழைக் காலங்களில் சின்ன வெங்காயத்தை பாதுகாக்க ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் நிர்வாகம்” என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது.
பயிற்சியின் முக்கியத்துவம்
இப்பயிற்சியில் மழைக்காலத்தில் சின்ன வெங்காயம் பயிரைத் தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்களை இயற்கை மற்றும் செயற்கை முறையில் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும், வளர்ச்சியூக்கிகள் பற்றியும் மற்றும் குறைந்த செலவில் அதிக லாபம் பெற தேவையான தொழில்நுட்பங்கள் பற்றியும் தெளிவாக விளக்கவுரை அளிக்கப்படும்.
பங்குபெற தகுதியானோர்
இதில் விவசாயிகள், விவசாய பெண்மணிகள், ஊரக இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் பயிற்சியில் கலந்து கொண்டு பயனடையலாம்.
நடைபெறும் இடம்
ஆகையால் இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ள விவசாயிகள் முன்பதிவு செய்துகொள்ள தொடர்புக்கு 04286 266345, 266650, 9943008802 மற்றும் 7010580683 என்ற தொலைபேசி எண்களை அணுகவும். மேலும் பயிற்சிக்கு பதிவு செய்வதில் நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்ணை கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும்.