ராசிபுரம் முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரி உயிர் தொழில்நுட்பத்துறை சார்பில் இலவச காளான் வளர்ப்பு பயிற்சியளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கல்லூரி உயிர்தொழில்நுட்பத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கல்லூரியின் உயிர்தொழில் நுட்பவியல் துறை, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றமும் இணைந்து “இலவச காளான் வளர்ப்பு பயிற்சி” அளிக்கிறது. ராசிபுரம் அருகேயுள்ள மோளப்பாளையம் கிராமத்தில் நவம்பர் 25, 26 ஆகிய இரு நாட்கள் பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் கலந்துக் கொள்ள விருப்பமுடைய நாமக்கல் மாவட்ட விவசாயிகள், தன்னார்வ தொண்டர்களும் முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரி உயிர் தொழில்நுட்பத்துறை தலைவரிடம் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் 98946 89809 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.