ஈஷா யோகா மையம் சார்பில் கிராமப்புற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் 16-வது கிராமோத்சவம் ராசிபுரம் அருகயுள்ள ஆர்.பட்டணம் பகுதியில் நடைபெற்றது.
ஈஷா யோகா மையம் சார்பில் கிராமப்புற மாணவ மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கிராமப்புற விளையாட்டுத் திருவிழாவினை ஆண்டுதோறும் நடத்திவருகிறது. இதனை தொடர்ந்து 16-வது விளையாட்டுத் திருவிழாவின் முதல்கட்ட கைப்பந்துப் போட்டிகள் நவ.16, 17 ஆகிய நாட்களில் ஆர்.பட்டணம் பார்க்கவன் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் பட்டணம், மல்லசமுத்திரம், பூலாவாரி, சப்பையாபுரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. நாக்அவுட் முறையில் நடைபெற்ற இந்த போட்டியின் இறுதி போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் மல்லசமுத்திரம் அணியும் உத்தமசோழபுரம் அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று மோதின. இதில் மல்லசமுத்திரம் அணி 25-24, 25-24, 25-22 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று பரிசுகள் பெற்றன. 2-ம் இடம் உத்தமசோழபுரம் அணியும், பூலாவரி சன் பிரதர்ஸ் அணி 3-ம் இடமும், 4-வது இடம் சப்பையாபுரம் அணியும் பெற்றது. வெற்றி பெற்ற அணியினருக்கு பட்டணம் பேரூராட்சியின் துணைத் தலைவர் பொன்.நல்லதம்பி, வள்ளிராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வெற்றி வெற்றவர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கினர் . போட்டிக்கான ஏற்பாடுகளை ஈஷா யோகா மையத்தினர் செய்திருந்தனர்.