Monday, December 23, 2024
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeநடப்புகள்தமிழ் மண்ணில் வித்தையை காட்டிய பீகார் இளைஞர் - காவலாளியை தாக்கி ரூ.8 லட்சம் பணத்துடன்...

தமிழ் மண்ணில் வித்தையை காட்டிய பீகார் இளைஞர் – காவலாளியை தாக்கி ரூ.8 லட்சம் பணத்துடன் தப்பி ஒட்டம்

வேலை கொடுக்கும் மக்களே உஷார்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகேயுள்ள கொண்டமநாயக்கன்பட்டி பகுதியில் கிரஷரில் வேலை செய்து வந்த காவலாளியை தாக்கிவிட்டு ரூ.8 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற பீகார் இளைஞரை போலீஸார் துரத்திச் சென்று கைது செய்துள்ளனர். சேந்தமங்கலம் அருகே கொண்டமநாயக்கன்பட்டியில் அதிமுகவை சேர்ந்த ஜி பி வரதராஜன் என்பவருக்கு சொந்தமான ஜி.பி.கிரஷர் உள்ளது. அங்கு பீகார் மாநிலம் முங்கேர் மாவட்டம் மாடர்பூர் பகுதியை சேர்ந்த சஜாத் என்பவர் மகன் ஆசாத் ( 24) என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பணியாற்றி வந்துள்ளார். இவர் சொந்த ஊருக்கு செல்வதாகக்கூறி செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்டு சென்றுள்ளார். ஆனால் இவர் நள்ளிரவு கிரஷரில் புகுந்து இரவுக் காவலாளி பழனிசாமி நாயக்கர் (65) என்பவரை தாக்கிவிட்டு அங்கிருந்த ரூ.8 லட்சம் பணத்தை கொள்ளையடித்து தப்பியோடியுள்ளார். இந்நிலையில், இது குறித்து கிரஷர் உரிமையாளர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சேலம் வழியாக பேருந்தில் ஏறி பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த இளைஞர் ஆசாத்தை துரத்தி சென்று கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ளூர் போலீஸார் உதவியுடன் சேந்தமங்கலம் போலீஸார் கைது செய்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!