நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பல்வேறு இடங்களில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் வைத்து விற்பனை செய்த நான்கு கடைகளுக்கு ராசிபுரம் பகுதியில் காவல்துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் சீல் வைத்தனர்.

இதில் ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள பெட்டி கடை மற்றும் விஜயலட்சுமி திரையரங்கம் அருகே அமைந்துள்ள பெட்டிக்கடை மேலும் சிவானந்தா சாலை பகுதியில் அமைந்துள்ள மளிகை கடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து அங்கே அரசால் தடை செய்த புகையிலை விற்பனை செய்த நபர்களுக்கு அபராதம் விதித்து கடைக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த ஆய்வில் ராசிபுரம் காவல் உதவி ஆய்வாளர்கள் சுரேஷ், கீதா, உணவு பாதுகாப்பு துறை அலுவலர் முருகன் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு நடத்தி ரூ. 5,000 மதிப்புள்ள புகையிலை __ பொருட்களை பறிமுதல் செய்து கடைகளுக்கு சீல் வைத்தனர்