நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை துறை சார்பில் தேசிய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளியின் ஆசிரியர்கள் மாணவிகளுக்கு தீபாவளி பண்டிகை முன்னிட்டு விபத்து இல்லாத தீபாவளியை கொண்டாடுவதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகயாக பட்டாசுகளை எவ்வாறு பாதுகாப்பாக வெடிப்பது பாதுகாப்பான மகிழ்ச்சியான தீபாவளியை கொண்டாடுவது பட்டாசு வெடிக்கும் பொழுது ஏற்படும் விபத்துகளில் இருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு ஆரம்ப நிலையிலே தடுப்பது என்பது குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு மற்றும் செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர்.
ராசிபுரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய அலுவலர் வெ.பலகார ராமசாமி, சிறப்பு நிலைய அலுவலர் இரா. இராஜேந்திரன் மற்றும் பணியாளர்களுடன் சேர்ந்து விழிப்புணர்வு செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய பள்ளி தலைமை ஆசிரியர் பாபு உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.