நாமகிரிப்பேட்டை அருகேயுள்ள மூலப்பள்ளிப்பட்டி கிரீன்வேர்ல்டு எக்ஸெல் சிபிஎஸ்சி பள்ளியில் நடைபெற்ற கோகோ போட்டியில் பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றுள்ளனர். கிரீன் வேர்ல்டு எக்ஸல் பள்ளியில் கொங்கு சகோதயா காம்ப்ளக்ஸ் சார்பில் கோகோ போட்டிகள் அண்மையில் நடத்தப்பட்டன. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற கோகோ போட்டியில் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சார்ந்த சுமார் 700 பேர் பங்கேற்றனர்.
இப்போட்டிகளை ராசிபுரம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஆர்.விஜயகுமார், நாமகிரிப்பேட்டை காவல்துறை ஆய்வாளர் அம்பிகா , ஆகியோர் பங்கேற்று தொடங்கி வைத்தனர். இதில் கிரீன் வேர்ல்டு எக்ஸெல் பள்ளியின் மாணவர்கள் 10, 12 வயதிற்கு கீழ்பட்டோர் பிரிவில் முதலிடமும், 19 வயதிற்கு கீழ்பட்டோர் பிரிவில் 2-ம் இடமும் பெற்றனர். இதனை தொடர்ந்து பள்ளியின் முதல்வர் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்து பாராட்டப்பட்டனர். பள்ளியின் நிர்வாகிகள் பலரும் இதில் பங்கேற்றனர்.