நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மத நல்லிணக்கத்தை வழிபடுத்தியும், ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரியும் நடைபயணப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பி.ஏ.சித்திக் தலைமையில் நடைபெற்றது நடைப்பயணம் நிகழ்ச்சியில் திரளானோர் பங்கேற்றனர். மதநல்லிணக்கம், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரியும் மத்திய அரசை வலியுறுத்தி இந்த நடைபயணப் பேரணி நடந்தது. முன்னதாக நாமக்கல் பகுதியில் தொடங்கிப் பேரணி, முத்துக்காபட்டி, சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி, சிங்களாந்தபுரம் வழியாக ராசிபுரம் வந்தடைந்தது. பின்னர் இறுதியில் கோரிக்கை வலியுறுத்தி கோஷமெழுப்பினர்.
பேரணியில் மாநில துணைத்தலைவர் டாக்டர் செழியன், முன்னாள் மாவட்ட தலைவர் பாச்சல் ஏ.சீனிவாசன் , வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் டி.ஆர்.சண்முகம், முன்னாள் மகளிரணி மாவட்டத் தலைவர் கலைசெல்வி, ராசிபுரம் நகரத் தலைவர் ஸ்ரீராமுலு ஆர்.முரளி, நாமக்கல் நகரத் தலைவர் மோகன், பொதுக்குழு உறுப்பினர் மெய்ஞானமூர்த்தி, ராசிபுரம் நகர செயலாளர் கோவிந்தராஜ், நகர பொருளாளர் மாணிக்கம் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.