நாமக்கல் மாவட்டம் சிலம்பம் அசோசியேஷன், தமிழ்நாடு சிலம்பம் அசோசியேஷன் சார்பில் சர்வதேச நடைபயிற்சி தினத்தை தொடர்ந்து (அக்.6)விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இதனையடுத்து பெரியமணலி பேருந்து நிலையத்தில் இருந்து பெரியசாமி நகரியகாளியம்மன் கோவில் வரை நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவியர்கள் சிலம்பம் சுற்றியவாறு நடைபயிற்சியாக சென்று நடப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் நாமக்கல் மாவட்டசிலம்பம் அசோசியேஷன் செயலாளர் ஏ.பன்னீல், ஆர்.சீனிவாசன் தலைமையில் வல்வில் ஒரி ஸ்போர்ட்ஸ் அகாடமி பயிற்சியாளர்களுடன், மாணவ மாணவியர்கள் பங்கேற்று நடந்து சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.