Wednesday, February 12, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeதகவல்கள்நாமக்கல்: பொதுமக்கள் பயனாபாட்டிற்கு புதியதாக நீதிமன்ற செயலி தொடக்கம்

நாமக்கல்: பொதுமக்கள் பயனாபாட்டிற்கு புதியதாக நீதிமன்ற செயலி தொடக்கம்

நாமக்கல் நீதிமன்றத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு புதியதாக நீதிமன்ற செயலி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி இதனை தொடங்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்ட தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் இலவச சட்ட உதவி பெற 15100 என்ற புதிய கட்டணமில்லா உதவி எண் மற்றும் செயலி தொடங்கப்பட்டது. பொதுமக்கள் இணைய வழியில் விண்ணப்பிக்க www.nalsa.gov.in./ sams என்ற முகவரியில் இது குறித்து அறிந்து உதவி பெறலாம்.

நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய சட்டப் பணிகள் ஆணை குழு சார்பில் இலவச சட்ட உதவி பெற 15100 என்ற கட்டணமில்லா உதவி எண் மற்றும் செயலி தொடங்கப்பட்டது. இதனை முதன்மை நீதிபதி ஆர்.குருமூர்த்தி தலைமை வகித்துத் துவக்கி வைத்தார்.

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான ஜி.கே.வேலுமயில் ஏற்பாட்டில், நாமக்கல் மகிளா நீதிபதி முனுசாமி, கூடுதல் மாவட்ட நீதிபதி பிரபா சந்திரன், குடும்ப நல நீதிபதி பாலகுமார், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் விஜயகுமார், முதன்மை சார்பு நீதிபதி விஜய் கார்த்திக், கூடுதல் சார்பு நீதிபதி கண்ணன், மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாய நீதிபதி தங்கமணி, மாவட்ட முதன்மை உரிமைகள் நீதிமன்ற நீதிபதி விக்னேஷ்மது ஆகியோர் பங்கேற்று மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் விழிப்புணர்வு செய்தனர்.

இதில் யாவருக்கும் நீதி பெற சம வாய்ப்பு என்ற அடிப்படையில் பொதுமக்கள் தங்களது வழக்கு சம்பந்தமான ஆலோசனைகளை பெற இந்த கட்டணமில்லா எண் மற்றும் இணையத்தை பயன்படுத்தி கொள்ளும் வகையில் இந்த இலவச எண் மற்றும் இணை சேவை தொடங்கப்பட்டுள்ளது இந்த நிகழ்ச்சியில் அரசு வழக்கறிஞர்கள் உதவி அரசு வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர் என பலரும் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!