திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, நாமக்கல் கிழக்கு மாவட்டத் திமுக செயலாளர் கே.ஆர். என்.ராஜேஷ்குமார் MP., ஆலோசனைப்படியும், மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் பி.எஸ்.சீனிவாசன் ,
சி.ஆனந்தகுமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்
சி.விஸ்வநாத் ஆகியோரின் மேற்பார்வையில் ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெண்ணந்தூர் ஒன்றியத்தில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களால் இல்லந்தோறும் உறுப்பினர்கள் சேர்க்கை மேற்கொள்ளப்பட்டது. முதல் கட்டமாக பூர்த்தி செய்யப்பட்ட 1600 உறுப்பினர்களுக்கான படிவங்களை வெண்ணந்தூர் ஒன்றிய செயலாளர் ஆர்.எம்.துரைசாமி முன்னிலையில் நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் எம். கார்த்திக் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில் மாவட்ட அயலக அணி அமைப்பாளர் விஜயபாஸ்கரன், வெண்ணந்தூர் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ரமேஷ், துணை அமைப்பாளர் வித்யா, அருள், தினேஷ் உட்பட இளைஞரணி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.