Wednesday, February 12, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeநடப்புகள்தட்டாங்குட்டை ஊராட்சியில் பனை விதை நடும் பணி

தட்டாங்குட்டை ஊராட்சியில் பனை விதை நடும் பணி

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, கிரீன் நீடா சுற்றுசூழல் அமைப்பு, தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு, நாமக்கல் மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைத்து ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியின் தொடர்ச்சியாக தட்டாங்குட்டை ஊராட்சிக்கு உட்பட்ட வேமங்காட்டுவலசு வாய்க்கால் கரையோர பகுதியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பனை விதை நடும் பணி நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு தளிர்விடும் பாரதம் அறக்கட்டளையின் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். சமூக ஆர்வலர் சித்ரா பாபு, நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குமாரபாளையம் அரிமா சங்க தலைவர் ஆடிட்டர் சரவணகுமார், கொல்லிமலை பல்லூயிர் பாதுகாப்பு குழு பன்னீர்செல்வம், ஆகியோர் பனை விதை நடும் பணியை துவக்கி வைத்தனர். இதில் தளிர்விடும் பாரதம் அறக்கட்டளையினர், சுற்றுசுழல் ஆர்வலர்கள் உஷா, ரவிச்சந்திரன், உதவி பேராசிரியர் சரவணகுமார், அன்பழகன், ராம்கி, பூபாலநவீன் உட்பட பலர் கலந்து கொண்டு பனை விதை நடவு செய்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் தளிர்விடும் பாரதத்தின் செயலாளர் பிரபு நன்றி கூறினார்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!