நாமக்கல் மாவட்ட நிர்வாகம், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக ,நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து முகாமினை சனிக்கிழமை நடத்தின. இதில் பங்கேற்ற 317 பேருக்கு பணி ஆணைகள் விழாவில் வழங்கப்பட்டன. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ச.உமா தலைமையில் நடைபெற்ற இதற்கான விழாவில் நகரமைப்பு திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எம்.மதுரா செந்தில் முன்னிலை வகித்தார்.
முன்னதாக இம்முகாமில் 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளிக்கல்வி முடித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகள், தையற்பயிற்சி, நர்சிங் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சி பெற்றவர்களும் கலந்து கொண்டனர். இம்முகாமில் 113 தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டன. சுமார் 2103 இளைஞர்கள் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்றனர். அவர்களில் தேர்வான 317 நபர்களுக்கு பணி ஆணைகளை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா, வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) கு.செல்வராசு, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வார் பாதுகாப்பு அலுவலர் த.முத்துராமலிங்கம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பொ.மா.ஷிலா, மஹேந்ரா கல்லூரி இயக்குனர் பா.மஹா அஜய் பிரசாத், செயல் இயக்குனர் ஆர்.சாம்சன்ரவீந்திரன், உட்பட துறை சார்ந்த அலுவலர்கள், கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.