சேந்தமங்கலம் அரசு கலைக்கல்லூரியில் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. ராசிபுரம் ரோட்டரி சங்கம், சேந்தமங்கலம் கலை அறிவியல் கல்லூரி ரோட்ராக்ட் சங்கம், நாமக்கல் டாக்டர் அகர்வால் மருத்துவமனை ஆகியன இணைந்து இந்த முகாமினை நடத்தின. இம்முகாம் தொடக்க விழாவில் முகாம் ஒருங்கிணைப்பாளர் ஜி.கலையரசு வரவேற்றார். உதவிப் பேராசிரியர் வி.செந்தில்குமார் தலைமை வகித்தார். ராசிபுரம் ரோட்டரி சங்கத்தின் தலைவர் எம்.முருகானந்தம் முகாமினை துவக்கி வைத்துப் பேசினார்.
இதில் கல்லூரி மாணவ மாணவிகள், கல்லூரிப் பேராசிரியர்கள், கல்லூரியில் பணிபுரியும் ஊழியர்கள் என 610 பேருக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ரோட்டரி மாவட்ட மகிழ்வு பள்ளிகள் தலைவர் கே.எஸ்.கருணாகர பன்னீர்செல்வம், சங்கப் பொருளாளர் பி.கே.ராஜா, நிர்வாகிகள் ஜி.ராமலிங்கம், ரோட்ராக்ட் தலைவர் எஸ்.பூமணி உள்ளிட்ட பலரும் இதில் பங்கேற்றனர்.இம்முகாமில் இன்றும் (ஆக.20) நடைபெறும்.