திருவண்ணாமலை மாவட்டத்தில் குளிர்பானம் குடித்து சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ராசிபுரம் அருகேயுள்ள குளிர்பான தயாரிப்பு ஆலையிலும் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் சோதனை நடத்தினர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 வயது சிறுமி குளி்ர்பானம் குடித்த நிலையில் திங்கள்கிழமை உயிரிழந்துள்ளார் என கூறப்படுகிறது. சிறுமி குடித்த குளிர்பானம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக குளிர்பான தயாரிப்பு ஆலையில் அரசு அலுவலர்கள் சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டுள்ல நிலையில், இந்த நிறுவனத்துக்கு சொந்தமான ராசிபுரம் அருகேயுள்ள ஏ.கே.சமுத்திரம் பகுதியில் செயல்பட்டுவரும் மற்றொரு ஆலையிலும் நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அருண் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர். ஆலையில் இருந்து தயாரிப்புக்கான ரசாயன மூலப்பொருள் , குளிர்பானம் போன்றவற்றின் மாதிரிகள் பரிசோதனை ஆய்வுக்கு எடுத்துச்சென்றனர். ஆய்வு பின்னர் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.