ரோட்டரி கிளப் ஆப் ராசிபுரம் ராயல் சார்பில் கல்லங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சர்வதேச தாய்ப்பால் வார விழா அண்மையில் நடைபெற்றது. இவ்விழாவில் ராயல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் பூபாலன் தலைமை வகித்தார். செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் அருள் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் சர்மிளா, சுகாதார ஆய்வு மருத்துவர் ஏகலைவன், செவிலியர் கஸ்தூரி ஆகியோர் கலந்து கொண்டு தாய்பால் வார விழா குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தினர். இதில் 30 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். இந்த திட்டத்தினை திட்ட சேர்மன் கார்த்தி ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் ராயல் ரோட்டரி நிர்வாகிகள், பொதுமக்கள் பலரும் பங்கேற்றனர்.