திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கலைக் கல்லூரியில் தேசிய கைத்தறி தினத்தை தொடர்ந்து பேஷன் டிசைனிங் துறை மற்றும் கோவை மக்கள் சேவை மையம் மற்றும் ஈரோடு டிரீம்சோன் இணைந்து நடத்திய கைத்தறி ஆடை அணிவகுப்பு போட்டி நடைபெற்றது.
திருச்செங்கோடு விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு பேஷன் டிசைனிங் துறை மற்றும் கோவை மக்கள் சேவை மையம் மற்றும் ஈரோடு டிரீம்சோன் இணைந்து நடத்திய கைத்தறி ஆடை அணிவகுப்பு போட்டி நடைபெற்றது. இவ்விழாவில் விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தாளாளர் டாக்டர் மு. கருணாநிதி தலைமை தாங்கினார். விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் அறக்கட்டளை நிர்வாக உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். துகிலியியல் மற்றும் ஆடை அலங்கார வடிவமைப்பியல் துறையின் தலைவர் டாக்டர் அரைஸ்மேரி வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் டாக்டர் பேபிசகிலா சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கோவை மக்கள் சேவை மையத்தின் பிரதிநிதி கெளரி சரவணன், ஈரோடு டிரீம்சோன் நிறுவனத்தின் சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டு கைத்தறி ஆடைகளின் பயன்பாட்டின் முக்கியத்துவத்தை மாணவிகளிடம் எடுத்துரைத்தனர். இதனை தொடர்ந்து மாணவிகளின் ஆடை அணிவகுப்பு போட்டி நடைபெற்றது. இந்நிகழ்வில் பேஷன் டிசைனிங் துறை மாணவிகள் மட்டுமல்லாது விவேகானந்தா உறுப்புக்கல்லூரி மாணவிகள் என 250 க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு கைத்தறியில் நெய்யப்பட்ட துணிகளாலான ஆடைகளை அணிந்து போட்டியில் பங்கேற்றனர். மூன்று சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில் முதல் பரிசினை பேஷன்டிசைன் துறையின் மாணவி காவியா , இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசினை இளங்கலை முதலாமாண்டு கணினி பயன்பட்டியியல் துறையின் மாணவிகள் ஸ்ரீதர்சினி சந்திரிகா, மிருணா, ஆகியோர் பெற்றனர். இவ்விழாவில் மாணவிகள் சுமார் 1500- க்கும் மேற்பட்ட மாணவிகள் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக பேஷன் டிசைன் துறையின் பேராசிரியர் சிவசங்கரன் நன்றி கூறினார்.