நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் அமைந்துள்ள 13 அரசு நடுநிலைப் பள்ளிகளின் நூலகங்கள் பயன்பாட்டிற்காக ரோட்டரி மாவட்டம் 2982 கல்விக்குழு சார்பில் 13 பீரோக்கள் பள்ளியின் ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கொல்லிமலை ஆரியூர் கிழக்கு அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற இதற்கான விழாவில் நாமக்கல் பவுல்டரி டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் ஆர்.பிரபாகரன் தலைமை வைத்தார். ரோட்டரி மாவட்டம் (2982) கல்விக் குழுத் தலைவர் ஏ.வெங்கடேஸ்வர குப்தா, நாமக்கல் ஆசிரியர் பயிற்சி பள்ளி முதல்வர் எம்.செல்வம் ரோட்டரி மாவட்ட பப்ளிக் இமேஜ் தலைவர் அம்மன் ஆர்.ரவி, ரோட்டரி மாவட்ட கல்வி குழு மகிழ்வு பள்ளிகள் தலைவர் கே.எஸ்.கருணாகர பன்னீர்செல்வம் , திட்டத்தின் ஸ்பான்சர் நாமக்கல் பவுல்ட்ரி டவுன் ரோட்டரி சங்க மூத்த உறுப்பினர் அபி டிரேடர்ஸ் உரிமையாளரும், கோல்டன் டோனருமான சி.பன்னீர்செல்வம், நாமக்கல் இன்னர் வீல் சங்க முன்னாள் தலைவர் பி.தாட்சாயினி பன்னீர்செல்வம், கொல்லிமலை ஆரியூர் நாடு வட்டார கல்வி அலுவலர் பழனிச்சாமி, ஆரியூர் நாடு ஊராட்சித் தலைவர் சி.நாகலிங்கம், ராசிபுரம் வாசவி கல்விக் குழுவை சேர்ந்த வெண்ணந்தூர் சந்தியா, நாமக்கல் இன்னர் வீல் சங்க தலைவர் புவனேஸ்வரி நடராஜன் ஆகியோர் கலந்துகொண்டு விழாவில் வாழ்த்துரை வழங்கிப் பேசினர். முன்னதாக விழாவில் நாமக்கல் டயட் பேராசிரியர் தேவராஜ் அனைவரையும் வரவேற்றார். நாமக்கல் பவுல்ட்ரி டவுன் ரோட்டரி சங்க மூத்த உறுப்பினர் திருவள்ளுவன் நன்றி கூறினார்.
இந்த ஆண்டு ரோட்டரி மாவட்டத்தின் ஆளுநர் வி.சிவகுமார் அவர்களின் கனவு திட்டமான ரோட்டரி மாவட்டத்தில் உள்ள 1008 பள்ளிகளுக்கு பீரோக்கள் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ரோட்டரி கல்விக் குழு தலைவர் வெங்கடேஸ்வர குப்தா தெரிவித்தார்.