நாமக்கல் மாவட்டத்தில் சைபர் குற்றங்கள் குறித்து புகார் செய்யும் வழிமுறைகள் குறித்து நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ராஜேஸ்கண்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

சைபர் கிரைம் குற்றங்களில் (இணையவழி குற்றங்கள்) பிரதானமானது பண
மோசடி (financial fraud) சம்மந்தப்பட்ட குற்றங்கள் ஆகும். இது போன்ற குற்றங்களில் பொதுமக்கள் தங்களது வங்கி கணக்கில் இருந்து பணத்தை தங்களது ஸ்மார்ட் செல்போனிற்கு வரும் ஏதேனும் போலியான லிங்க், போலியான செயலிகள் (APP) மூலம் பணத்தை இழக்கின்றனர். போலி முதலீடு மற்றும் பகுதி நேர வேலை மோசடி மூலம் பணத்தை இழக்கின்றனர். மேலும் வேறு ஏதேனும் மோசடிகள் மூலமும் பணத்தை இழக்கின்றனர்.
அதிகரித்து வரும் சைபர் கிரைம் குற்றங்களை கருத்தில் கொண்டும், சைபர்
கிரைம் குற்றம் நடைபெற்ற உடன் பாதிக்கப்பட்ட நபர் அனுப்பிய பணத்தை
குற்றவாளிகளின் வங்கி கணக்கில் உடனடியாக முடக்குவதற்காகவும், காலதாமதமாக புகார்கள் பதிவு செய்யப்படும் பட்சத்தில் குற்றவாளிகள் வங்கிக் கணக்கில் இருந்து எளிதில் பணத்தை எடுத்து விடுவதாலும், அரசு சார்பில் இணைய வழி குற்றங்கள் குறித்த புகார்கள் அளிப்பதற்கு பல்வேறு வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வங்கி கணக்கில் இருந்து பண இழப்பு ஏற்பட்டால்: ஹெல்ப் லைன் நெம்பர்: -1930 (குற்றம் நடந்த 72 மணி நேரத்திற்குள்), சைபர் குற்றம் நடந்த 72 நேரத்திற்கு பிறகு – (www.cybercrime.gov.in), மற்ற இணைய வழி குற்றங்களுக்கு-(www.cybercrime.gov.in), செல் போன் தொலைந்து போனால் உள்ளூர் காவல் நிலையம் அல்லது Tamilnadu Police Citizen portal Website -ல் புகார் ரசீது பெற்று அதை வைத்து, www.ceir.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.