நாமகிரிப்பேட்டை நகர அரிமா சங்கத்தின் 2-வது நிகழ்முறை கூட்டம் சங்கத்தின் தலைவர் தனசேகர் தலைமையில் நடைபெற்றது. இதில் சங்கத்தின் செயலர் மணிகடன் வரவேற்றுப் பேசினார். விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் பங்கேற்று புதிய நிர்வாகிகளை வாழ்த்திப் பேசினார். முன்னதாக மின் மயான வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன.

நிகழ்ச்சியில் அரிமா மாவட்ட தலைமை பண்பு பயிற்சியாளர் இனியவன் இளங்கோவன், மண்டல தலைவர் நடராஜன், வட்டார தலைவர் எஸ்.ரங்கசாமி, வட்டார ஒருங்கிணைப்பாளர் கமலக்கண்ணன், விஸ்வநாதன் உள்ளிட்ட அரிமா சங்கத்தின் நிர்வாகிகள் பங்கேற்று அரிமா சங்க செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்து பேசினர்.
விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட செயலாளர் பொன் வீரக்குமார், ஒருங்கிணைப்பாளர் சேந்தை கோபாலகிருஷ்ணன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ராயல் பத்மநாபன், நாமகிரிப்பேட்டை திமுக நகர செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி நிறைவில் அரிமா சங்க பொருளாளர் கார்த்தி நன்றி கூறினார்.