நாமக்கல்: தமிழக அரசின் பசுமை தமிழ்நாடு மிஷன் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் பசுமை பகுதிகளை அதிகரிக்க வனத்துறை மூலம் இலவச மரக்கன்றுகள் வழங்கப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ச.உமா தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் 2021 ஆம் ஆண்டில் பசுமைத் தமிழ்நாடு மிஷன் என்ற திட்டத்தை மாநிலத்தின் பசுமையான பகுதிகளை அதிகரிக்கும் நோக்கத்துடன் தொடங்கி வைத்தார். அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தில் நடவு செய்து 2024-25-ம் ஆண்டில் நாற்றங்கால் வளர்க்கும் பணிகள் நாமக்கல் வனப் பிரிவு மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் மூலம் நாற்றங்கால்களில் நாட்டு மர வகைகள் மற்றும் பல்வேறு தேவைகளுக்கு ஏற்ற உயர்தர மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு விரைவில் இலவசமாக வழங்கப்படும். குறிப்பாக ஆல், அரசு, அதி, நீர் மருது, புங்கன், வேம்பு, தேக்கு, மகாகனி, வேங்கை, செம்பருத்தி, நாவல், சவுக்கு போன்ற நல்ல தரமான மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு, கீழ்க்கண்ட இடங்களில் முற்றிலும் இலவசமாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தாலுக்கா வாரியாக தொடர்புகொள்ள வேண்டிய வன அலுவலகம்-எண்கள்:
- நாமக்கல் சந்திரசேகரன் -9942062486, 04286 – 281369
- ராசிபுரம் சக்திவேல் -8883985972
அன்பரசு – 9345868554 - சேந்தமங்கலம் நந்தகுமார் – 9344364987
- பரமத்தி வேலூர் அருள் குமார் – 9842702859
- திருச்செங்கோடு முரளி – 9698892071
- கொல்லிமலை சுகுமார் – 8870114906
தீபக் – 8903666909
கோபி – 9789131707 - குமாரபாளையம் பிரவீன் குமார் -7550195814
செல்வம் -9787545460 - மோகனூர் சந்திரசேகரன் -9942062486 விவசாயிகள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அரசு மற்றும் தனியார் துறை அமைப்புகள், பொதுமக்கள் ஆகியோர் தங்கள் இடங்களில் மரக்கன்றுகளை நடுவதற்கு சம்பந்தப்பட்ட வன அலுவலர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு மரங்களை பராமரித்தவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பரிசுகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பங்கேற்க, பின்வரும் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தேவையான ஆவணங்கள்:
- மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள இடம் / பகுதியின் பட்டா, சிட்டா நகல்
- விண்ணப்பதாரரின் ஆதார் அடையாள அட்டையின் நகல்.
- விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.
குறிப்பு: இத்திட்டத்தில் வனத்துறை மூலம் இலவசமாக மரக்கன்றுகள் நடப்படும். விண்ணப்பதாரர்கள் நடப்பட்ட மரக்கன்றுகளுக்கு எந்தவித பாதிப்பும் இன்றி பாதுகாத்து பராமரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.