தமிழக அரசு டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான 05.09.2024 ஆசிரியர் தினமாக கொண்டுவதை தொடர்ந்து நல்லாசிரியர்கள் தேர்வு செய்ய முடிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதில் பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் முதல் அனைத்து பள்ளிகளின் ஆசிரியர்களும் EMIS இணையதளம் மூலம் ஆசிரியர்கள் தங்களது விவரங்களை பதிவேற்றம் செய்யலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 16.07.24 முதல் 27.07.24 வரை இதனை பதிவேற்றம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.