நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காவல்துறையினருக்கு ஆயுதப்படை மைதானத்தில் கைத்துப்பாக்கி கையாளும் பயிற்சியளிக்கப்பட்டது.
தமிழகத்தில் அண்மையில் சென்னை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கூலிப்படையினரால் கொலை சம்பவங்கள் நடைபெற்றன..

சென்னையில் நடைபெற்ற பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் எதிர்கட்சிகளால் கடும் விமர்ச்சித்துக்குள்ளானது. இந்த சம்பவங்களால் தமிழக்கத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவட்டுவிட்டது என எதிர்கட்சிகள் ஆளும் அரசை குற்றம் சாட்டி வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக சென்னை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட பல்வேறு காவல்துறை அலுவலர்களை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. திருச்சியில் பலகோடிக்கு அதிபதியான தொழிலதிபராகவும் உள்ள ரவுடி ஒருவர் போலீசாரை வெட்டியதற்காக என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்நிலையில் தமிழகத்தில் காவல்துறை உதவி ஆய்வாளர் முதல் டிஎஸ்பி வரையில் எப்போதும் உடன் கைத்துப்பாக்கியை கையில் வைத்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காவல்துறையினருக்கு நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் கைத்துப்பாக்கி கையாளும் விதமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்ட எஸ்பி., ராஜேஸ்கண்ணன் தலைமையில் எஸ்ஐ முதலான காவல்துறையினருக்கு இப்பயிற்சியளிக்கப்பட்டு இனி கைத்துப்பாக்கி வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.