நாமகிரிப்பேட்டை அருகே பச்சுடையாம்பாளையம் பகுதியில் 15 நாட்களாக கிணற்றில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நாய் தீயணைப்புத்துறையினர் உதவியுடன் மீட்பு – பச்சுடையாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நடேசன் (70), இவருக்கு சொந்தமாக விவசாயம் உள்ளது. இந்த விவசாய நிலத்தை அதே பகுதியை சேர்ந்த பாலு (48) என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். பாலு தனது விவசாய தோட்டத்திற்கு பாதுகாப்பாக ராக்கி என்ற பெயரிடப்பட்ட வளர்ப்பு நாயை வளர்த்து வருகிறார். எப்போதும் வீட்டிருகே இருக்கும் நாய் கடந்த 15 நாட்களாக வீட்டுற்கு திரும்பி வீட்டிற்கு வரவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் வியாழக்கிழமை காலையில் தனது விவசாயப் பணிக்கு சென்றபோது அப்பகுதியில் இருந்த பாழடைந்த கிணற்றிலிருந்து நாயின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக ராசிபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே நிலை அலுவலர் பலகாரராமசாமி தலைமையிலான தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பாழடைந்த கிணற்றில் இருந்த மரக்கிளைகளை அப்புறப்படுத்தி 15 நாட்களாக உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நாயை உயிருடன் மீட்டனர். 15 நாட்களுக்குப் பிறகு மேலே வந்த நாய் தனது உரிமையாளரை கண்டதும் நன்றியுடம் தாவியணைத்து முத்தமிட்டு அன்பை பொழிந்தது. பின்னர் நாய்க்கு உணவளித்து உரிமையாளர்- நாய்க்குமான பாசப்போரட்டத்தை கண்டு பொதுமக்கள் நெகிழ்ச்சி.