நாடுமுழுவதும் புதியகுற்றவியல் நடைமுறை சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டத்துக்கு நாடு முழுவதும் வழக்குரைஞர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சட்டங்கள் அணைத்தும் வடமொழியில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் தபால் நிலையம் முன்பு ராசிபுரம் வழக்கறிஞர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் புதிய சட்ட திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும வழக்குரைஞர்கள் கோஷமெழுப்பினர். ஆர்பாட்டத்தில் வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகள் காமராஜ், வாசுதேவன், தங்கதுரை, சதீஸ், கதிர்வேல், செல்வகுமார், கதிர்வேல், ஜி.பூபதி, ஹரி, கீதாலட்சுமி, ராதாசந்திசேகரன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: ராசிபுரம் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்
RELATED ARTICLES