Tuesday, December 24, 2024
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeநடப்புகள்ரோட்டரி சங்கம் சார்பில் ஆர்.புதுப்பட்டி அரசு பள்ளியில் ரூ.1.30 லட்சம் மதிப்பில் மிதிவண்டி கூடம் திறப்பு

ரோட்டரி சங்கம் சார்பில் ஆர்.புதுப்பட்டி அரசு பள்ளியில் ரூ.1.30 லட்சம் மதிப்பில் மிதிவண்டி கூடம் திறப்பு

ராசிபுரம் அருகேயுள்ள ஆர்.புதுப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் ரூ.1.30 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட மிதிவண்டி கூடம் திறப்பு விழா (ஜூலை.3)நடைபெற்றது. அரசு உயர்நிலைப்பள்ளிக்கு முன்னாள் மாணவியும், நன்கொடையாளருமான மாதேஸ்வரி சத்தியமூர்த்தி நிதியுதவி திட்டத்தின் கீழ் ராசிபுரம் ரோட்டரி சங்கத்தின் மூலம் மிதிவண்டி கூடம் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.

இதற்கான திறப்பு விழாவில் ராசிபுரம் ரோட்டரி சங்கத்தின் தலைவர் எம்.முருகானந்தன் தலைமை வகித்தார். செயலர் கே.ராமசாமி வரவேற்றார். முன்னாள் தலைவர் எல்.சிவக்குமார் ரோட்டரி இறைவணக்கம் வாசித்தார். ரோட்டரி சங்க உதவி ஆளுநர் கு.பாரதி முன்னிலை வகித்தார். இவ்விழாவில் ராசிபுரம் ராசி இன்டர்நேஷனல் பள்ளியின் தலைவர் எஸ்.சத்தியமூர்த்தி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று மிதிவண்டி கூடத்தை திறந்து வைத்துப் பேசினார். விழாவில் அவர் பேசுகையில், தங்களது வளர்ச்சிக்கான எந்த வாய்ப்புகளையும் மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தூய்மையை பின்பற்ற வேண்டும். மாதா,பிதா, குரு தெய்வம் என்பதை மனதில் வைத்து ஆசிரியர்களிடம் எப்போதும் மரியாதை இருக்க வேண்டும். ஆசிரியர்கள் எப்போதும் தங்களது மாணவர்கள் உயர்ந்த இடத்திற்கு வரவேண்டும் என்பதை மனதில் கொண்டே செயல்படுபவர்கள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். ஒழுக்கத்தை எப்போதும் கடைபிடிப்பது அவசியம். நாம் வாழும் வாழ்க்கை நமக்கும், சமூகத்திற்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும். நமக்கு கிடைப்பதை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்றார். முன்னதாக பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

விழாவில் பள்ளி தலைமயாசிரியர் (பொறுப்பு) ஜோதி, உதவி ஆசிரியர் தினேஷ், ரோட்டரி முன்னாள் தலைவர் கே.எஸ்.கருணாகர பன்னீர்செல்வம், ஆர்.திருமூர்த்தி (எ) ரவி, பி.சீனிவாசன், எஸ்.பிரகாஷ், ஆர்.சிட்டி, நிர்வாகிகள் ஆர்.ஆனந்தகுமார், பி.கண்ணன், முரளி, மஸ்தான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!