சேலம் மோகன் குமாரங்கலம் அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வராக பணியாற்றியவர் டாக்டர் ஆர்.மணி, இதே போல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கண்காணிப்பாளராக பணியாற்றியவர் டாக்டர் பி.வி.தனபால் இருவரும் 30.6.2024 அன்றுடன் பணி ஒய்வு பெற்றதையடுத்து இவர்களுக்கான பாராட்டு விழா மருத்துவ மருத்துவக் கல்லூரி கலை அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

இதில் சேலம், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், கல்வி நிறுவன நிர்வாகிகள், நண்பர்கள், ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினர் இதில் பங்கேற்று இருவருக்கும் சால்வை அணிவித்து பூங்கொத்து, நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டிப் பேசினர். இவ்விழாவில் சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தாதேவி பங்கேற்று இருவரின் மருத்துவச் சேவையை குறிப்பாக கரோனா காலகட்டத்தில் மேற்கொண்ட பணிகளை பாராட்டி நினைவு பரிசளித்துப் பேசினார். மேலும் டாக்டர் பி.வி.தனபாலின் பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள், அவரது மகள் ஆகியோர் இதில் பங்கேற்று அவரை பாராட்டி நெகிழ்வான தருணத்தை பலரும் குறிப்பிட்டு பேசினர்.

மேலும் இவர்களது மக்களுக்கான மருத்துவச் சேவை மேலும் தொடரவேண்டும் என்றும் பலரும் விருப்பம் தெரிவித்துப் பேசினர்.