Friday, April 18, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeமாவட்ட செய்திகள்நாமக்கல்நாமக்கல்லில் இசாப் (ESAF) வங்கி கிளை திறப்புவிழா

நாமக்கல்லில் இசாப் (ESAF) வங்கி கிளை திறப்புவிழா

நாமக்கல் நகரில் இசாப் ( ESAF) சிறு வங்கியின் நாமக்கல் கிளை திறப்புவிழா திருச்செங்கோடு சாலை பட்டிக்கவுண்டர் வளாகத்தில் நடைபெற்றது. திறப்பு விழாவில் இசாப் வங்கியின் சென்னை பிராந்திய தலைவர் முத்துவள்ளியப்பன் கதிரேசன் தலைமை வகித்துப் பேசினார். கிளஸ்டர் ஹெட் பாலாஜி விருந்தினர்களை வரவேற்றார். கிளையின் தலைவர் ரஜிஸ் கலபுராயல் வங்கி செயல்பாடுகள் மற்றும் சேவைகள் குறித்து பேசினார்.

கே.கே.பி குழுமத்தின் தலைவர் நல்லதம்பி வங்கி கிளையினையும், தங்கம் மருத்துவமனை மருத்துவர் குழந்தைவேலு வங்கியின் ஏ.டி.எம் மையத்தையும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் த.ஜெயகுமார் வெள்ளையன் வங்கியின் லாக்கர் அறையையும், சதர்ன் டிரான்ஸ்போர்ட் தயாளன் வங்கியின் கேஷ் கவுண்டரையும் திறந்து வைத்துப் பேசினர். விழாவில் தொழிலதிபர் சீனிவாசன் மாணிக்கம், பட்டிக்கவுண்டர் செல்வம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட செயலாளர் பொன் வீரக்குமார், பசுமை தில்லை சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இறுதியில் இசாப் வங்கி கிளை மேலாளர் அருண் நன்றி கூறினார்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!