கோடை விடுமுறை முடிந்து ஜூன்.10-ல் பள்ளிக்கு வந்த பள்ளிக்குழந்தைகளுக்கு சால்வை அணிவித்து கரகோஷத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. ராசிபுரம் பாரதிதாசன் சாலை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களையும் பெற்றோர்களையும் தலைமை ஆசிரியர் கு.பாரதி வரவேற்றார். பின்னர் வட்டாரக் கல்வி அலுவலர் அருள்மணி தலைமையில் இவ்வாண்டு புதியதாக சேர்ந்த மாணவர்களுக்கு பள்ளி நுழைவாயில் இருந்து வரவேற்பு கொடுக்கப்பட்டது.
மேலும் அனைத்து மாணவ மாணவிகள் குழந்தைகளுக்கு பொன்னாடை அணிவித்து இனிப்புகள் ,நோட்டு புத்தகங்கள் கொடுக்கப்பட்டு பள்ளியின் மாணவர்களை கைத்தட்டி கரகோசத்துடன் வரவேற்பு வழங்கினர். பள்ளி குழந்தைகளுக்கு உற்சாகத்தையும், ஆர்வத்தையும் ஏற்படுத்திட இதுபோன்ற வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர். இது போன்ற நிகழ்ச்சி பள்ளி குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெற்றோர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.