பசுமை தமிழ்நாடு சுற்றுச்சூழல் அமைப்பு கோரிக்கை
நாட்டில் வன வளங்களை காக்கும் யானைகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பசுமை தமிழ்நாடு சுற்றுச்சூழல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து இந்த அமைப்பின் நிறுவனர் நல்வினைச் செல்வன் அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கை: நாட்டில் யானைகளின் எண்ணிக்கையில்
2012-ல் இருந்து 2017 ஆண்டுகளில் 3397 யானைகள் குறைந்துள்ளது.
வனங்களை காப்பதில் முக்கிய பங்கு வைப்பது யானைகள் தான்.
யானைகளின் எண்ணிக்கை குறைவது என்பது வனங்களின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் தான்.
தற்போது தென்னிந்திய அளவில் பல மண்டலங்களாக பிரிக்கப்பட்டு யானைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கி உள்ளது. தற்போதைய வனத்துறை அறிக்கை யானைகளின் எண்ணிக்கை துல்லியமாக தெரியவரும்.
ஆட்சியாளர்கள் யானையின் எண்ணிக்கையை மட்டும் கணக்கெடுத்து விட்டு கடந்து செல்லக்கூடாது. யானைகளைப் பாதுகாக்கின்ற வகையில் சட்ட விதிகளை கடுமையாக்க வேண்டும்.குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும்.
சமூக விரோதிகளால் யானையில் கொல்லப்படுவதும், ரயிலில் அடிப்பட்டு யானைகள் இறப்பதும், மின்வேலியில் சிக்கி யானைகள் கொல்லப்படுவதும்,
சட்டவிரோதமாக வன விலங்குகளை வேட்டையாடுவதையும் தடுக்கப்பட வேண்டும் என எமது பசுமை தமிழ்நாடு சுற்றுச்சூழல் அமைப்பின் சார்பில் அரசினை வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றோம்.