நாமக்கல் மாவட்டம் நாரைக்கிணறு அருகே வடுத்துடையார் தோட்டத்தில் ரத்தினம் என்ற பெண் விவசாயி கால்நடைகளை வளர்த்து வருகிறார். இவரது தோட்டத்தில் விவசாயம் செய்து வருவதுடன், மாடுகள், ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில், திங்கள்கிழமை நள்ளிரவு இவரது பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தலச்சேரி உயர்ரக ஆடுகள் சத்தம் கேட்டு வந்து பார்த்தபோது, குள்ளநரி வகை செந்நாய்கள் கடித்து ஆடுகளை வயிற்றுப்பகுதியில் குதறியுள்ளது. இதில் பலஆடுகள் குடல் சரிந்தும், கற்பப்பைகள் வெளியில் சரிந்தும் துடிதுடித்து உயிரிழந்தன. இதில் மொத்தம் 9 ஆடுகள் பலியாகின. இதனையடுத்து அதிகாலை கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு பார்த்தபோது செந்நாய்கள் கடித்ததாக தெரியவந்தது. இதனையடுத்து உயிரிழந்த ஆடுகளை அனைத்தையும் ஜேசிபி எந்திரம் வரவழைக்கப்பட்டு குழி தோண்டி புதைக்க விவசாயி ரத்தினம் முடிவு செய்தார். மேலும், உயிரிழந்த ஆடுகள் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என தெரிகிறது. மலைசார்ந்த இப்பகுதிகளில் தொடர்ந்து செந்நாய்கள் தொல்லை இருந்து வருவதால் வனத்துறை மூலம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாரைக்கிணறு அருகே செந்நாய்கள் கடித்து குதறி 9 ஆடுகள் பலி
RELATED ARTICLES