தமிழக வனத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் தனது குடும்பத்தினர் நண்பர்களுடன் ஊட்டி முதுமலையில் யானை வழித்தட பாதையை மறித்து கட்டப்பட்டதாக புகாரில் சிக்கி விசாரணையில் உள்ள தனியாருக்கு சொந்தமான ரிசாட்டில் தங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக வனத்துறை அமைச்சரும், ராசிபுரம் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான டாக்டர் மா.மதிவேந்தன் கடந்த சில தினங்களாக தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் ஊட்டியில் உள்ள முதுமலை “ஜங்கிள் ஹட் ” என்ற தனியார் ரிசார்ட்டில் தங்கி இருந்தார். கடந்த 2023 ஆம் ஆண்டு ஊட்டி முதுமலையில் கட்டப்பட்டுள்ள 12 தனியார் ரிசார்ட்டுகள் யானை வழித்தட பாதையை மறித்து கட்டப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து உச்ச நீதிமன்றம் தனியார் ரிசார்டுகள் குறித்து விசாரணை நடத்த குழு அமைத்திருந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி குழு விசாரணை நடந்துவரும் நிலையில் புகாரியில் சிக்கி உள்ள 12 ரெசார்ட் களில் அமைச்சர் தங்கியிருந்த ஜங்கிள் ஹட் என்ற தனியார் விடுதியும் விசாரணை வளையத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அமைச்சர் இந்த விடுதியில் தங்கியதுதான் இந்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.