Monday, December 23, 2024
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeகல்விச்சோலைஇந்திய விமானப் படையில் இசை கலைஞர்கள் தேர்வு

இந்திய விமானப் படையில் இசை கலைஞர்கள் தேர்வு

இந்திய விமானப்படையால், அக்னிவீர் வாயு (இசை கலைஞர்) தேர்விற்கு பெங்களூரில் அமைந்துள்ள 7-வது ஏர்மேன் தேர்வு மையத்தில் இந்திய ராணுவத்தால் 03.07.2024 முதல் 12.07.2024 வரை ஆட்சேர்ப்பு பேரணி நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்கு திருமணமாகாத விருப்பமுள்ள ஆண்/பெண் 05.06.2024 வரை https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். விண்ணப்பதாரர்கள் 02.01.2004 முதல் 02.07.2007 தேதிக்குள் பிறந்தவராக இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் இசைக்கல்வியில் தேர்ச்சி பெற்றவராகவும், Concert Flute / piccolo / Oboe / Clarinet in Eb/Bb / Saxophone in Eb/Bb / French horn in F/Bb / Trumpet in Eb/C/Bb / Trombone in Bb/G/ Baritone / Euphonium / Bass / Tuba in Eb/Bb அல்லது Keyboard / Organ / Piano / Guitar (Acoustic/Lead/Bass) /Violin, Viola, String Bass / Percussion / Drums (Acoustic/Electronic) / All Indian Classical Instruments ‘போன்ற ஏதேனும் ஒரு இசை கருவியை வாசிப்பதில் வல்லுநராக இருக்க வேண்டும்.

மேலும், இத்தேர்வு குறித்த விவரங்களை நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அலுவலக வேலை நாட்களில் நேரில் அணுகி அறிந்து கொள்ளலாம் அல்லது அலுவலக தொலைபேசி எண் 04286 -222260 வாயிலாக தொடர்பு கொள்ளலாம். நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்த இளைஞர்கள் இத்தேர்வில் பங்கு பெற்று பயனடையுமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச. உமா தெரிவித்துள்ளார்கள்

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!