மரணம் ஈமச்சடங்கு நிவாரண உதவி பெற கூட மாற்றுத்திறனாளிகளை போராட வைக்கும் அதிகாரிகள்!

185

மாற்றுத்திறனாளி இயற்கை மரணம் அடைந்தால் ரூ.15,000/- ஈம சடங்கு செய்ய ரூ.2,000/- என மொத்தம் ரூ.17,000 குடும்பத்தினருக்கு மாற்று திறனாளிகள் நல வாரியம் மூலம் வழங்கும் திட்டம் உள்ளது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுகா பிரம்மதேசம் கிராமத்தில் திரு.சண்முகம்(61) என்ற மாற்றுத்திறனாளி 2023 ஜூன் 16 அன்று மரணம் அடைந்துள்ளார்.

மேற்கண்ட தொகையை வழங்க எந்த துறையிடம் இருந்தும் மரணத்திற்கான நிவாரணம் பெறவில்லை என கிராம வருவாய் அலுவலரிடம் சான்று வாங்க சொல்லி ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் வாய்மொழியாக கூறியிருக்கிறார். ஆனால், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மக்கள் சாசன ஆவணத்தில் இத்திட்டத்தில் பயன்பெற அதிகாரி சொன்னது போன்று வழிகாட்டு நெறிமுறை எதுவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரம்மதேச வருவாய் அலுவலரிடம் கடந்த ஒரு மாதத்திற்கு மேல் சான்று வழங்க கேட்டால் முடியாது என்கிறார் வேற வழியில்லாமல் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போடு உரிமைகளுக்கான சங்கம்-TARATDAC சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

போராட்டம் நடத்திய சங்கத்தின் ஈரோடு மாவட்ட தலைவர் சாவித்திரி உள்ளிட்ட நிர்வாகிகளிடம் பேசிய அந்தியூர் வட்டாட்சியர் இவ்வாறு சான்று வழங்க எங்களுக்கு அரசு உத்தரவு எதுவும் இடவில்லை என்று கூறி மறுத்துவிட்டதை அடுத்து, மாற்றுத்திறனாளி அலுவலர் நேரடியாக அந்தியூர் வந்து, உறுதிமொழி அளித்தால் போதும் என்று கூறியதன் அடிப்படையில் போராட்டம் முடித்து வைக்கப்பட்டது.