நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு எளையாம்பாளையம் பகுதியில் உள்ள விவேகானந்தா கல்வி நிறுவனங்கள் மற்றும் நிறுவனத்தின் தலைவர் மு. கருணாநிதி அவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இக்கல்வி நிறுவன வளாகத்தில் தான் மக்களவைத் தொகுதி வாக்கு எந்திரம் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல் கந்தம்பாளையம் எஸ்கேவி கல்வி நிறுவனங்களின் தலைவரும், ரியல் எஸ்டேட் தொழில் அதிபரும், திருச்செங்கோடு பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவருமான கோல்டன் ஹார்ஸ் ரவி வீடு, அலுவலகம்,திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் கோவில் முன்னாள் அறங்காவலர்குழுத் தலைவர் சபரி வீடு அலுவலகம் போன்ற இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.