மீண்டும் வந்துட்டேனு சொல்லு – என கெத்து காட்டி தேர்தல் பிரச்சாரம்
சில தினங்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நாமக்கல் அண்ணா திமுக வேட்பாளர் ராஹா சு.தமிழ்மணி ஒய்வுக்கு பின் உடல் நலம் தேறி மீண்டும் தனது பிரச்சாரத்தை துவக்கினார். நாமக்கல் தொகுதியில் ஆரம்பம் முதலே பொதுமக்களிடம் குறிப்பாக கிராமப்புறங்களில் விவசாயத் தொழிலாளர்கள், முதியோர்களுடன் கட்டித்தழுவி ஆடல் பாடல்களில் உற்சாகமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இவரது பிரச்சாரம் கிராமப்புறங்களில் பெரும் வரவேற்பினை பெற்று வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் பிரச்சாரத்தின் போது திடீர் மயக்கம் ஏற்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் எதிர்கட்சியினர் சு.தமிழ்மணி மருத்துவமனையில் தீவீர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவர் இனி தேர்தல் பிரச்சாரத்துக்கு வருவாரா என்பது சந்தேகம் தான் என சமூக வலைதளங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர். மேலும் அவரது உடல் ஆரோக்கியம் குறித்து பல்வேறு சந்தேகங்களை கிளப்பினர்.
இந்நிலையில், உடல் நலம் பெற்று மருத்துவர்களின் ஆலோசனைபடி ஒய்வுக்கு பின்னர், பரமத்திவேலூர் பகுதியில் பல்வேறு இடங்களில் ராஹா சு.தமிழ்மணி வாக்காளர்களிடம் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். பொத்தனூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அவருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சரும், கட்சியின் நாமக்கல் மாவட்டச் செயலாளருமான பி.தங்கமணி, பரமத்திவேலூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சேகர், திரைப்பட இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். பிரச்சாரத்தின் போது திறந்த ஜீப்பில் வாக்கு சேகரித்த சு.தமிழ்மணி, ஒய்வில்லாமல் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதால், உடலில் சர்க்க்ரை அளவு குறைந்து, உடல் அசதி ஏற்பட்டு மருத்துர்களின் ஆலோசனை படி ஒய்வு மேற்கொண்டேன். ஆனால் இனி பிரச்சாரத்துக்கு வரமாட்டேன் என பிரச்சாத்தில் எதிர்கட்சியினர் தவறான தகவல்களை பரப்பினர். இதனை முறியடித்து மீண்டும் தேர்தல் களத்தில் நிற்கிறேன். நான் மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தருவதில் முனைப்புடன் செயல்படுவேன் என உறுதியளிக்கிறேன். எனவே இரட்டை இலை சின்னத்தில் மக்கள் வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும். என்றார். பிரச்சாரத்தின் போது பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

