அதிமுக வேட்பாளர் சு.தமிழ்மணியின் ஜனரஞ்சக கலகலப்பூட்டும் தேர்தல் பிரச்சாரம்: கைபிசைந்து கலங்கி நிற்கும் நாமக்கல் திமுக கூட்டணி வேட்பாளர் வி.எஸ்.மாதேஸ்வரன்
நாமக்கல் நாடாளுமன்றத் தேர்தலில் பல்வேறு கட்சியின் வேட்பாளர்கள் தீவிர தேர்தல் களத்தில் பணியாற்றி வந்தாலும், அதிமுக, திமுக, பாஜக போன்ற வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நாமக்கல் அண்ணா திமுக வேட்பாளர் ராஹா சு.தமிழ்மணி செல்லும் இடங்களில் எல்லாம் மக்களிடம் கலகலப்புடன் உறவாடி அவர்களுடன் கைகோர்த்தும் அரவணைத்தும் வாக்கு சேகரித்து வருகிறார். குறிப்பாக வயல் வெளிகளில் பணியாற்றும் விவசாய கூலித்தொழில் செய்யும் பெண்கள், கிராமங்களில் உள்ள மூதாட்டிகளிடம் கட்டித்தழுவியும், கைகோர்த்தும் வாக்கு கேட்டு வருவது பெண்களிடம் அன்பையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.
இன்னும் ஒரு படி மேலே சென்று சு.தமிழ்மணி எம்ஜிஆர் காலத்து பாடல்களை மூதாட்டிகளுடன் இணைந்து மைக்கில் பாடி வாக்கு சேகரித்து வரும் நிகழ்வுகள் வாக்காளர் மத்தியில் உற்சாகத்தையும், உத்வேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது எனலாம். இதனால் எதிரணியில் உள்ள திமுக வேட்பாளர் கைபிசைந்து கலங்கி நிற்கிறார்.
கைபிசைந்து நிற்கும் வேட்பாளர் வி.எஸ்.மாதேஸ்வரன்: அண்ணா திமுக வேட்பாளரின் மக்களுடான மிகு நெருங்கி ஜனரஞ்சகமான முறையில் வாக்கு சேகரிக்கும் பாணியால் கலங்கி நிற்கும் திமுக கூட்டணி வேட்பாளர் வி.எஸ்.மாதேஸ்வரன் செய்வதறியாக கைபிசைந்து நிற்கிறார். இதனால் கோழிப்பண்ணைகளில் முட்டை எடுத்து தொழிலாளர்களுக்கு உதவுவது, கைத்தறி நெசவாளர்கள் பகுதியில் நெசவுத் தொழில் செய்வது, தூய்மை பணியாளர்கள் காலில் விழுந்து வாக்கு கேட்பது போன்ற பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ளார்.
இதில் அதிமுக வேட்பாளர் சு.தமிழ்மணி கிராமிய பிரச்சார பாணி வக்காளர்களிடம் கைகொடுக்குமா? திமுக கூட்டணி வேட்பாளர் வி.எஸ்.மாதேஸ்வரன் முயற்சி எடுபடுமா? என்பது தேர்தல் முடிவு வெளிப்படுத்தும்.