அதிமுக ஆட்சி தமிழகத்தின் ஒளிமயமான காலகட்டம்: நாமக்கல் வேட்பாளர் ராஹா சு.தமிழ்மணியை ஆதரித்து பிரச்சாரக் கூட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமி பேச்சு
நாமக்கல்,ஏப்.4: அதிமுக ஆட்சி காலகட்டத்தில் தமிழகத்திற்கு எண்ணிலடங்கா மக்கள் நலத்திட்டங்கள், வளர்ச்சி திட்டப்பணிகள் செயல்படுத்துப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சி காலம் தமிழகத்தின் ஒளிமயமான காலகட்டம் என எடப்பாடி கே.பழனிசாமி குறிப்பிட்டார். நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ராஹா சு.தமிழ்மணியை ஆதரித்து கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, நாமக்கல் அடுத்த பொம்மைகுட்டைமேடு பகுதியில் நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் பங்கேற்று இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டி பேசினார். இக்கூட்டத்தில் அதிமுக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி, மகளிர் அணி இணைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டாக்டர் வெ.சரோஜா, கரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், முன்னாள் எம்எல்ஏ.,. கே.பி.பி.பாஸ்கர் உட்பட நிர்வாகிகள்பலர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமி மேலும் பேசியதாவது :
நாமக்கல் நாடாளுமன்றத்திற்கு சு.தமிழ்மணி அவர்கள் நிறுத்தப்பட்டுள்ளார். அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன். சு.தமிழ்மணி அவர்கள் நன்கு படித்தவர், நல்ல பண்பாளர், திறமையானவர். நாமக்கல் மாவட்டம், நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு மத்திய அரசில் இருந்து கிடைக்கின்ற பணிகளை சிறந்த முறையில் செயல்படுத்தி இந்த மாவட்டம் வளர்ச்சி அடைய உங்களுக்கு தேவையான நன்மைகள் கிடைக்க சு.தமிழ்மணி அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.
நாமக்கல் மாவட்டம் என்றாலே புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் எஃ;கு கோட்டை இந்த நாமக்கல் மாவட்டம். நாமக்கல் மாவட்டம் பல தொழில்கள் நிறைந்த மாவட்டம், நாமக்கல் மாவட்டம் கோழி வளர்ப்பு, லாரி தொழில், ரிக்தொழில், சேகோ பேக்ட்ரி, கைத்தறி, விசைத்தறி இப்படி பல தொழில்கள் நிறைந்த இந்த நாமக்கல் மாவட்டம். நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி இந்த விடியா அரசில் இந்த தொழில்கள் எல்லாம் நலிவடைந்துள்ளதை நாம் பார்க்கின்றோம். இந்த தொழில் சரியில்லாததால் வேலையில்லா நிலைமையை நாம் பார்க்கிறோம். கோழிப்பண்ணை உரிமையாளர்கள் பெரும் நஷ்டத்தில் சந்தித்துள்ளார்கள், கோழி தீவனத்தின் விலை மிகவும் கூடிவிட்டது, மின்சாரக் கட்டணம் கூடிவிட்டது, ஆனால் முட்டை விலை ஏறவில்லை. கோழி முட்டை உற்பத்தியாளர்களும், அதில் பணிபுரியும் தொழிலாளர்களும் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
இதேபோல் திருச்செங்கோடு மற்றும் நாமக்கல்லில் அதிகமானோர் ரிக் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அ.இ.அ.தி.மு.க ஆட்சி இருந்தவரை நெசவுத் தொழில் ஈடுபட்டு இருந்தவர்களுக்கு மானியம் வழங்கினோம். நான் முதலமைச்சராக இருந்த பொழுதும் மானியம் கொடுத்தோம் அதனால் அந்த தொழில் காப்பாற்றப்பட்டது. இந்த தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு பசுமை வீடுகள் வழங்கினோம், இந்த ஆட்சியில் அதுவும் நிறுத்தப்பட்டு விட்டது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் ஏராளமான திட்டங்களை நாம் வழங்கி உள்ளோம். தமிழகத்தில் அதிகமான திட்டங்களைப் பெற்ற மாவட்டம் இந்த நாமக்கல் மாவட்டம். திமுக தேர்தல் அறிக்கையிலே பலவற்றைக் கூறி உள்ளார்கள். சுங்க சாவடிகளை மூடுவதாக கூறியுள்ளார்கள், இந்த சுங்க சாவடிகளை கொண்டு வந்தது மத்தியிலேயே பாஜக ஆட்சி இருந்த பொழுது தரைவழி போக்குவரத்து அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு. அப்பொழுதுதான் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கப்பட்டது. அப்பொழுதுதான் சுங்க சாவடி ஏற்படுத்தப்பட்டது. அப்பொழுது திமுகவை சார்ந்த அமைச்சர் பாரதிய ஜனதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். ஒரு லாரி உரிமையாளர் கூறுகிறார், ஒரு லாரிக்கு சுமார் 8000 முதல் 10 ஆயிரம் வரை சுங்க சாவடி செலுத்துகிறோம் என்கிறார். திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் அறிக்கையில், சுங்கச்சாவடி மூடப்படும் என்று அறிவித்துள்ளார்கள். பாரதிய ஜனதா அமைச்சரவையிலே டி.ஆர்.பாலு தரைவழி போக்குவரத்து அமைச்சராக இருந்த பொழுது தான் இவ்வளவு சுங்க சாவடிகள் வந்தன என்பதை நாட்டு மக்கள் அறிய வேண்டும். தாங்கள் கொண்டு வந்ததை ரத்து செய்ய வேண்டும் என்று பேசுவதும், இதே திமுக தான் இரட்டை வேடம் போடும் ஒரே கட்சி திமுக என்பது நிரூபணம் ஆகிவிட்டது.
இந்தப் பிரச்சார பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் சேவல் எஸ்.ராஜா, பரமத்திவேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சேகர், சங்ககிரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுந்தர்ராஜன், முன்னாள் எம்எல்ஏ., பொன்.சரஸ்வதி, மாவட்ட அவைத்தலைவர் எஸ்.பி.கந்தசாமி, புதுச்சத்திரம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கோபிநாத், மாவட்ட பேரவை செயலாளர் இ.ஆர்.சந்திரசேகரன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் கே.பி.எஸ்.சுரேஷ்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் முரளி பாலுசாமி, தே.மு.தி.க நாமக்கல் வடக்கு மாவட்ட செயலாளர் விஜய் சரவணன், தெற்கு மாவட்ட செயலாளர் ஆர்.கே.இராமலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.அன்பழகன், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் ஆர்.சாரதா, பொதுக்குழு உறுப்பினர் மயில்சுதந்திரம் உட்பட ஒன்றிய, நகர, பேரூர், கிளைக் கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.