நாமக்கல்: தேர்தல் பணியின் போது பயிற்சிக்கு சென்று திரும்பிய வெண்ணந்தூர் அரசு ஆண்கள் பள்ளியின் ஆசிரியர் எம். ஜெயபாலன் விபத்தில் உயிரிழந்ததையடுத்து கருணைத்தொகை ரூ. 15 லட்சத்திற்கான காசோலை குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது.
ராசிபுரம் காட்டூர் சாலையில் உள்ள ஜெயபாலன் இல்லத்திற்கு நேரில் சென்ற மாவட்ட ஆட்சியர் சா.உமா இதற்கான காசோலையை நேரில் குடும்பத்தினரிடம் வழங்கினார்.மாவட்ட வருவாய் அலுவலர் சுமன் சேந்தமங்கலம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ச. பிரபாகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) நா. சிவக்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ப. மகேஸ்வரி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.