ராசிபுரம் நகர அதிமுக சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ராசிபுரம் சுவாமி சிவானந்தா சாலை கிழக்குத் தெரு பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் முழு உருவ சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்விற்கு ராசிபுரம் நகர அதிமுக செயலாளர் எம். பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சரும், அதிமுக மகளிரணி இணைச் செயலாளருமான டாக்டர் வெ.சரோஜா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் கட்சியின் மாவட்ட அவைத் தலைவர் எஸ். பி. கந்தசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
விடுதலை சிறுத்தைகள்: வெண்ணந்தூர் பேரூர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வெண்ணந்தூர் பகுதியில் உள்ள அம்பேத்க் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி பிறந்த தினவிழா கொண்டாடப்பட்டது. இதில் கட்சியின் வெண்ணந்தூர் பேரூர் செயலாளர் க.நடராஜன் தலைமை வகித்தார் .
சேலம்-நாமக்கல் மண்டல துணைச் செயலாளர் வ.அரசன், ஒன்றிய பொருளாளர் பழ. செங்கோட்டுவேல், வழக்கறிஞர் சுபாஷ் மாணிக்கம், மதிமுக நகர செயலர் தங்கவேல், திராவிடர் கழக ஒன்றிய அமைப்பாளர் செல்வகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ராசிபுரத்தில் பழைய பேருந்து நிலையம் பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் மும்பை அர்ஜுன் தலைமை வகித்தார். ராசிபுரம் நகர செயலாளர்கள் சுகுவளவன், பிரபு முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ராசிபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் செல்வநிலவன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் கோபிநாத், ராமன், அருணாச்சலம் , பட்டணம் பேரூர் செயலாளர் இளையராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட துணை அமைப்பாளரும், ராசிபுரம் நகர மன்ற உறுப்பினருமான பழனிச்சாமி, தலைமையில்அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர். நிகழ்வில் தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் கனகராஜ் ,ராசிபுரம் தொகுதி அமைப்பாளர் கண்ணன் ,ரா சிபுரம் நகர அமைப்பாளர் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திமுக சார்பில்…ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் முன்பு திமுக சார்பில் மாவட்ட இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளரும், நகர வளர்ச்சி மன்ற தலைவருமான வி.பாலு, தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் உருவப்படத்துக்கு பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் மணிமாறன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் நகரச் செயலாளர் பிடல் சேகுவேரா உள்ளிடோரும் பங்கேற்றனர்.