ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

62

ராசிபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீநித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோயிலில் சித்திரை புத்தாண்டை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடுகள் நடத்தினர்.

முன்னதாக ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், விபூதி, இளநீர் ,பன்னீர் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்று பின்னர் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரனை காண்பிக்கப்பட்டது.இதில் பத்கர்கள் சாமி தரிசனம் செய்தனர். பிரசாதங்களும் வழங்கப்பட்டது. சிறப்பு அலங்கார, அபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கோவில் பூசாரிகள் மணி, ராஜா ஆகியோர் செய்திருந்தனர்.