நாமக்கல்: ஜாமியா மஸ்ஜித் பள்ளி வாசலில் தொழுகை முடித்து திரும்பிய இஸ்லாமியர்களிடம் நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி திமுக கூட்டணி கொ.ம.தே.க.வேட்பாளர் வி.எஸ்.மாதேஸ்வரன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி., ஆகியோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்றத் தேர்தல் ஏப்.19-ல் நடைபெறுவதையொட்டி திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். நாமக்கல் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் துண்டு பிரசுரம் அளித்து தொழுகை முடித்து திரும்பிய இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.