இராசிபுரம் ராசி இன்டர்நேஷனல் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா
இராசிபுரம் ராசி இன்டர்நேஷனல் சிபிஎஸ்சி சீனியர் செகண்டரி பள்ளியில் 16ஆம் ஆண்டு மழலையர் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கான பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது. முன்னதாக விழாவில் பள்ளியின் தாளாளர் எஸ். சத்தியமூர்த்தி தலைமை வகித்து குத்து விளக்கேற்றி விழாவினை துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய பள்ளியின் தாளாளர் எஸ் சத்தியமூர்த்தி பள்ளி மாணவ மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் விழாவாக இது போன்ற விழாக்கள் நடத்தப்படுகின்றன. மாணவர்களுக்கு மதிப்பெண்களுடன் தனி திறன்களை வளர்ப்பது அவசியம். இதனை உணர்ந்து மொழி புலமை, அறிவியல் கணிதத் திறன் வெளிப்பாடு உள்ளிட்ட திறன் போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. இதன் மூலம் பள்ளி மாணவ மாணவிகளின் ஆற்றல் வெளிப்படும். இதனை தொடர்ந்து தான் இது போன்ற விழாக்கள் மாணவர்களிடையே நடத்தப்படுகின்றன என்றார்.
பள்ளியின் முதல்வர் வித்யாசாகர் மழலையர் வகுப்பில் நடைபெறும் பாட முறைகள், பள்ளியில் கற்பிக்கப்படும் மொழி வளம், கையெழுத்து பயிற்சி போன்றவை குறித்து பேசினார். முடிவில் மழலையர் வகுப்பு ஒருங்கிணைப்பாளர் எம் .சகாயராணி நன்றி கூறினார்.