Wednesday, June 10, 2026
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeகல்விச்சோலைராசிபுரம் YELLOW EDUSOFT நிறுவனத்தின் கோடை கால கம்யூட்டர் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும்...

ராசிபுரம் YELLOW EDUSOFT நிறுவனத்தின் கோடை கால கம்யூட்டர் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் IT நிறுவனமான YELLOW EDUSOFT நிறுவனம், கடந்த ஏப்ரல் – மே மாதங்களில் பள்ளி மாணவர்களுக்காக AI Summer Computer Program (COMPUTER HARDWARE & SOFTWARE, SAFE USAGE OF INTERNET, ANTI VIRUS, MS WORD, MS EXCEL, MS POWERPOINT, ARTIFICIAL INTELLIGENCE, GMAIL COMMUNICATION, GOOGLE DOCS, SPREADSHEET, FORMS, ENGLISH TYPING, C PROGRAMMING, PRESENTATION SKILLS, EFFECTIVE PUBLIC SPEAKING, PERSONALITY DEVELOPMENT, COMMUNICATION SKILLS) மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக INTERNSHIP PROGRAM ஆகியவற்றை நடத்தியது. இப்பயிற்சித் திட்டங்களை Founder & CEO என்ஜினீயர் T. மோகன்குமார் முன்னின்று வழிநடத்தினார்.

இதில் 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இங்கு பயின்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கும் விழா ஞானமணி பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக ஞானமணி கல்வி நிறுவனங்களின் துணை சேர்மேன் மதுவந்தினி அரங்கண்ணல்,கலந்து கொண்டார். மேலும் கவுரவ விருந்தினர்களாக பள்ளிகளின் ஆய்வைளர் கை.பெரியசாமி, Mrs. South India, Mrs. Tamil Nadu, Mrs. Salem பட்டங்களை பெற்ற T. கௌசல்யா ஆகியோரும் கலந்து கொண்டு, அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கி கவுரவித்தனர். மேலும் இவ்விழாவில் ராசிபுரம் தமிழ்க் கழகம், JCI, JCOM, ICON CIRCLE உறுப்பினர்கள், பெற்றோர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் என பலரும் பங்கேற்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!