Monday, March 30, 2026
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeமாவட்ட செய்திகள்நாமக்கல்பாஜக துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கத்துடன் அதிமுக வேட்பாளர்கள் சந்திப்பு

பாஜக துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கத்துடன் அதிமுக வேட்பாளர்கள் சந்திப்பு

தேசிய ஜனநாயக கூட்டணியின் நாமக்கல், சேந்தமங்கலம் (எஸ்டி) தொகுதி அதிமுக வேட்பாளர்கள் பாஜக துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராக ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன், சேந்தமங்கலம் (எஸ்டி) வேட்பாளராக சி.சந்திரசேகரன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பல்வேறு கூட்டணி கட்சியின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டு வரும் இவர்கள், ராசிபுரத்தில் பாஜக துணைத் தலைவர் டாக்டர் கே.பி.ராமலிங்கத்தை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர். நாமக்கல் வேட்பாளர் பி.எஸ்.மோகனுடன் அதிமுக வழக்குரைஞர் ஏ.வி.பாலுசாமி, நாமக்கல் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஆர்.கரிகாலன் உள்ளிட்டோரும், சேந்தமங்கலம் தொகுதி வேட்பாளருடன் ராகுல் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

ராசிபுரம் தொகுதி கூட்டணியில் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மற்றொரு பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமியும், கே.பி.ராமலிங்கத்தை நேரில் சந்தித்து பேசினார்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!