Sunday, March 29, 2026
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeமாவட்ட செய்திகள்நாமக்கல்நாமக்கல் மாவட்டத்தில் 5 தொகுதிகளுக்கு அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் 5 தொகுதிகளுக்கு அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமக்கல், ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (எஸ்டி)., திருச்செங்கோடு, பரமத்திவேலூர், குமாரபாளையம் என 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில், ராசிபுரம் (தனி) தொகுதி அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாவட்டத்தில் குமாரபாளையம் தொகுதியின் வேட்பாளராக முன்னாள் அமைச்சரும், மாவட்ட அதிமுக செயலாளருமான பி.தங்கமணிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், பிற நான்கு தொகுதி வேட்பாளர்கள் விவரம்:

நாமக்கல் தொகுதி: ஸ்ரீதேவி மோகன்

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் 4 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விவரம் வருமாறு: நாமக்கல் தொகுதி நாமக்கல் தொகுதி வேட்பாளராக ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன் (53) அறிவிக்கப்பட்டுள்ளார். பழையபாளையத்தைச் சேர்ந்த மோகனுக்கு மலர்விழி என்ற மனைவி, சஞ்சய் அஸ்வின், ஜஷ்வர்த்திகா என ஒரு மகன், மகள் உள்ளனர். கட்சியில் அதிமுக மாநில வர்த்தக அணி இணைச்செயலாளராக உள்ளார். முதல்முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார்.

சேந்தமங்கலம் தொகுதி (எஸ்டி): சி.சந்திரசேகரன்

சேந்தமங்கலம் தொகுதி (எஸ்டி) வேட்பாளராக சி.சந்திரசேகரன் (60) அறிவிக்கப்பட்டுள்ளார். கொல்லிமலை கீழ் சோளக்காட்டைச் சேர்ந்த சந்திரசேகரனுக்கு வெண்ணிலா என்ற மனைவி, இரு மகன்கள் உள்ளனர். 4-வது முறையாக சேந்தமங்கலம் தொகுதியில் சந்திரசேகரன் போட்டியிடுகிறார். கடந்த 1996-ம் ஆண்டு திமுகவில் இருந்து எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். 2016-ம் ஆண்டு அதிமுக சார்பில், 2021-ல் அதிமுகவில் வாய்ப்பு கிடைக்காததால் சுயேச்சையாக சேந்தமங்கலத்தில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். அந்த தேர்தலில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சந்திரசேகரன் கடந்த ஆண்டு மீண்டும் அதிமுகவில் இணைந்தார். கடந்த 2001, 2006, 2011 என 3 முறை அதிமுக ஒன்றிய செயலாளர், கொல்லிமலை ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர், சேந்தமங்கலம் தொகுதி முன்னாள் செயலாளர் ஆகிய கட்சிப் பதவிகளை வகித்துள்ளார்.

பரமத்தி வேலூர் தொகுதி: எஸ்.சேகர்

பரமத்தி வேலூர் தொகுதி வேட்பாளராக எஸ்.சேகர் (55) அறிவிக்கப்பட்டுள்ளார். இதே தொகுதியில் கடந்த 2021-ல் வென்று எம்எல்ஏவாக உள்ள சேகர், தொடர்ந்து இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவியும், காவ்யா, கவின் என்ற மகள், மகன் உள்ளனர். கோப்பணம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர், சட்டப்பேரவை பொதுக் கணக்குக் குழு உறுப்பினர் பதவிகளை வகித்துள்ளார். கட்சியில் முனியகவுண்டம்பாளையம் கிளை செயலாளராக இருந்துள்ளார். தற்போது கபிலர்மலை தெற்கு ஒன்றிய செயலாளராக உள்ளார்.

திருச்செங்கோடு தொகுதி: ஆர்.சந்திரசேகர்.

திருச்செங்கோடு தொகுதி வேட்பாளராக எஸ்.ஆர்.எம்.டி., ஆர்.சந்திரசேகர் (58) அறிவிக்கப்பட்டுள்ளார். திருச்செங்கோடு அருகே வட்டூரைச் சேர்ந்த இவர், முதல்முறையாக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுகிறார். மனைவி புஷ்பலட்சுமி அரசுப் பள்ளி ஆசிரியை.
போர்வெல் தொழிலில் ஈடுபடும் சந்திரசேகர் வட்டூர் ஊராட்சி துணைத் தலைவராகவும், திருச்செங்கோடு அட்மா குழு சேர்மனாகவும் பதவி வகித்துள்ளார். 1990-ம் ஆண்டு முதல் அதிமுகவில் உறுப்பினராக உள்ள சந்திரசேகர் திருச்செங்கோடு வடக்கு ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!