நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த தினமான மார்ச்.1-ல் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த தினவிழா திமுக சார்பில் பல்வேறு இடங்களில் மார்ச்.1-ல் கொண்டாடப்பட்டது. அரசு மருத்துவமனைகளில் அன்றைய தினம் பிறக்கும குழந்தைகளுக்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் தங்கமோதிரம் அணிவிக்கப்படும் என நாமக்கல் மாவட்டச் செயலர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி., அறிவித்திருந்தார். அதன்படி ராசிபுரம் அரசு மருத்துவமனையில் மார்ச்.1-ல் பிறந்த குழந்தைகள் மூவருக்கு கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் 1 கிராம் தங்க மோதிரம் அணிவித்தார். இதே போல் மாவட்டத்தில் 8 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின் போது, ராசிபுரம் நகர திமுக செயலர் என்.ஆர்.சங்கர், நகர்மன்றத் தலைவர் ஆர்.கவிதா சங்கர், ராசிபுரம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவமனை கலைச்செல்வி உள்ளிட்ட திமுக வார்டு செயலாளர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் என பலரும் பங்கேற்றனர்.





