ராசிபுரம் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் வெண்ணந்தூர் கிளை விவசாயிகள், விசைத்தறியாளர்கள், தொழிலாளர்கள் பாதிக்கும் வகையில் நகை கடன் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என வெண்ணந்தூர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் P.R.செங்குட்டுவேல் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்:
வெண்ணந்தூரில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், நெசவாளர்கள், விசைத்தறி தொழிலாளர்கள், மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் உட்பட சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டவர்களை வாடிக்கையாளர்களாக கொண்டு ஏழை மக்களின் அவசர அவசிய தேவைக்கு இந்தியாவில் தங்கம் மட்டுமே பிரதான அடமான பொருளாக இருந்து வருவதை அறிந்து தமிழக அரசுக்கு பெருமை சேர்க்கும் வகையில் வாடிக்கையாளர்களின் தங்க நகை அடகு கடன்கள் – மற்றும் வாய்தா முடிவுற்ற அடகு நகை கடன்களுக்கு வட்டி மட்டும் செலுத்தி மறு கடன் பெறுவது உட்பட அரை மணி நேரத்தில் ரொக்க பண பரிவர்த்தனை மூலம் கடன் கொடுத்தும் வட்டி பெற்றும் பொறுப்புணர்வுடன் தங்க நகைகளுக்கு உரிய பாதுகாப்பும் வழங்கி வாடிக்கையாளர்கள் சேவை உரிமையை நிறைவேற்றி வெற்றிகரமாக இயங்கி வந்தது .
கடந்த 1-10-2025, முதல் மேலான்மை இயக்குனர், பொதுமேலாளர், கிளை மேலாளர் ஆகிய அதிகாரிகள், வாடிக்கையாளர்களின்வாய்தா முடிவுற்ற அடகு நகை கடனுக்கு அசல் – வட்டி – சேவை வரி , உட்பட முழு பணமும் சங்கம் வரவு கணக்கு வைத்துள்ள IDBI – மற்றும் இந்தியன் வங்கி கணக்குகளில் செலுத்த வேண்டும், அடுத்த நாள் மறு நகை கடன் வழங்கப்படும் அல்லது அடகு நகைகள் திருப்பி தரப்படும், என்று இப்புதிய நடைமுறையை செயல் படுத்தினர் வாடிக்கையாளர்கள் ஏற்க்க வில்லை என்றால் உங்கள் அடகு நகைகள் ஏலம் விடப்பட்டு கூட்டுறவு சங்கம் கடன் கணக்குக்கு ஈடு செய்யப்படும் என்று பொது மக்களை அச்சப்பட வைக்கின்றனர்.
புதிதாக கடன் பெறுபவர் அவர் வங்கி கணக்கு புத்தகத்துடன் கூட்டுறவு சங்கத்தில் நகைகளை அடமானம் வைத்து விட்டு சென்று விட வேண்டும் அடுத்த நாள் அவர் வங்கி கணக்கில் உரிய பணம் செலுத்தப்படும் இனி மேல் இது தான் நடைமுறை நீங்கள் விருப்பபட்டால் எங்கள் சங்கத்தில் உங்கள் நகைகளை அடமானம் வையுங்கள் இல்லையென்றால் ஊரில் எத்தனையோ தங்க அடகு நிதி நிறுவனங்கள் உள்ளது அங்கு சென்று கடன் வாங்குங்கள் என்று ஏளனமாக வாடிக்கையாளர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பித்து ,அரசாணை, பொதுமக்கள் விளம்பர அறிவிப்பு, ஏதுமின்றி செயல்படுத்தி வருகின்றனர்.
கூட்டுறவு சங்கம் அலுவலர்கள் செய்ய வேண்டிய வங்கி பண பரிவர்த்தனைகளை வாடிக்கையாளர்களை செய்ய வைத்து நடைமுறை படுத்தி வருவது பொதுமக்களின் கூட்டுறவு சங்க சட்ட விதிமுறைகளுக்கு விரோதமாகவும் அதிகார துஷ்பிரயோகம், நம்பிக்கை மோசடி மற்றும் சேவை பெரும் உரிமையை பறிப்பது ஆகும்,
கடந்த செப்டம்பர் மாதம் இதே போல் வாய்மொழி உத்தரவுகளை செயல்படுத்தி வந்ததை 5-8-2025 ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் அவர்களிடமும், நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைர் அவர்களின் கவனத்திற்கு புகார் மனு கொடுத்ததின் பேரில் வாய்மொழி உத்தரவுகளை கைவிட்டு பழைய படி ரொக்க பண பரிவர்த்தனையை மீண்டும் செயல்படுத்தி வந்தனர்.
மேலும் அக்டோபர் மாதம் 1-10-2025 ல் தற்போதைய வாய்மொழி உத்தரவு நடை முறையால் அவகாசம் இல்லாத வாய்தா முடிவுற்ற தங்க அடகு நகை வாடிக்கையாளர்கள் அசல் – வட்டி சேவை வரி உட்பட முழு பணமும் சேகரித்து கட்ட முடியாமல் தங்கள் அடகு நகைகள் ஏலம் போய் விடுமோ என்று அச்சப்பட்டு மன வேதனைக்கு ஆளாகி வருகின்றனர்.
மேற்படி வாடிக்கையாளர்களின் இயலாமையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இக் கூட்டுறவு சங்கமும், இப்பகுதியில் இயங்கி வரும் மணப்புரம், முத்தூட் பைனான்ஸ் போன்ற தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் கந்து வட்டி கும்பல்கள் கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு நாள் தோறும் படையெடுத்து வாய்தா முடிவுற்ற வாடிக்கையாளர்கள் அடகு நகைகளுக்கு முழு பணம் கொடுத்து தங்கள் நிறுவனங்களுக்கு மடை மாற்றம் செய்கின்றனர்.
கந்து வட்டி கும்பல் 1 லட்சம் ரூபாய்க்கு ஆயிரம் ரூபாய் வட்டி என்று பணம் கொடுத்து அடகு நகைகளை தங்கள் வசம் பறித்து செல்கின்றனர்.
இந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 100 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மேற்படி கூட்டுறவு சங்கத்தின் வாய்மொழி உத்தரவால் தங்க நகை கடன் தனியார் நிதி நிறுவனங்களை நோக்கி சென்றுள்ளனர். மேற்படி கூட்டுறவு சங்கத்திற்கு சுமார் 40 லட்சத்திற்கும் மேல் வரவு செலவில் பணம் இழப்பீடு ஏற்பட்டிருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது. தங்க நகை கடன் சம்பந்தமாக 2025 ஆம் ஆண்டு இந்திய பாராளுமன்றத்தில் புதிய மசோதா கொண்டு வந்து அது எதிர்க்கட்சிகள் பொதுமக்கள் கடும் எதிர்ப்பால் வாபஸ் பெறப்பட்டது. தற்போது தேசிய வங்கிகளில் கூட இந்த நடைமுறை இல்லை, மற்றும் தமிழ் நாட்டில் கூட்டுறவு சங்கங்களுக்கு எந்த ஒரு திருத்தப்பட்ட அரசாணையும் வெளியிடவில்லை எங்கும் இந்த நடைமுறை இல்லை.
எனவே மேற்படி கூட்டுறவு சங்கத்தின் அதிகாரிகள் தன்னிச்சையான வாய்மொழி உத்தரவுகள் பிறப்பித்து அதிகார துஷ்பிரயோகம் செய்து வருவதை தாங்கள் சமூகம் தடுத்து கூட்டுறவு சங்க வாடிக்கையாளர்களின் சேவை உரிமையை பாதுகாத்தும் , வாடிக்கையாளர்களை தொடர்ந்து வெளியேற்றி விட்டு பணப் பரிவர்த்தனைகளில் லட்சக்கணக்கில் இழப்பீடுகளை இழந்து வரும் கூட்டுறவு சங்கத்தையும் பாதுகாத்திட உரிய உத்தரவுகளை பிறப்பித்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.





