நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் மஹேந்ரா பொறியியல் கல்லூரி ஏரோ நாட்டிக்கல் துறை மற்றும் இந்திய பொறியாளர் அமைப்பு இணைந்து விண்வெளி தொழில்களில் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துதல் என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கினை நடத்தியது. தொடக்க விழாவில் கல்வி நிறுவனங்களின் தலைவர் எம்.ஜி.பாரத்குமார் தலைமை வகித்தார்.

கருத்தரங்கில் தமிழ்மணி, மேனாள் இயக்குனர், மத்திய அரசின் பாதுகாப்பு, ஆராய்ச்சி துறையினர் முன்னாள் இயக்குனர் தமிழ்மணி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினார். விழாவில் அவர் பேசியது:
மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் இன்றைய வானியல் துறையில் இயந்திரப் பராமரிப்பு, விமான வழித்தடங்கள், தொழில்நுட்ப பயன்பாடுகள், உற்பத்தி மேம்பாடு மற்றும் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த உதவும். இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் மற்றும் காம்பேக்ட் ஏர் டீம் சிஸ்டம் ஆகியவை செயற்கை நுண்ணறிவை விமான தொழில்நுட்பத்துடன் இணைத்து இதனுடைய தரவுகளை பகுப்பாய்வு செய்து ராணுவம் மற்றும் வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வருகிறது. மேலும் இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த விண்வெளி மற்றும் வானியல் துறைக்கு தன்னாட்சி அமைப்புகளை ஏற்படுத்தி மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதால் சமூக வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் மாற்றங்களை உருவாக்கப்பட்டு வருவது நாட்டின் வளர்ச்சி உதவும் என்று பேசினார்.
கருத்தரங்கில் இயந்திரம் மற்றும் வானியல் துறை சார்பாக கலந்துரையாடல்கள், விவாதங்கள், திட்ட விளக்கம், காட்சிப்படுத்துதல் ஆகியவை நடைபெற்றது. சிறந்த திட்ட விளக்கங்கள் மற்றும் விவாத கட்டுரைகளுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது. கருத்தரங்கில் பிற மாநிலங்களில் இருந்து ஆராய்ச்சியாளர்கள், பொறியியல் மாணவர்கள், அறிவியல் அறிஞர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இக்கருத்தரங்கில் இந்திய பொறியாளர் அமைப்பின் தேசிய தலைவர் வி.பி.சிங், பி.வி. ங்கட கிருஷ்ணன், வி.கார்த்திகேயன், சேலம் பிரிவு தலைவர் கே .தங்கராசு, கல்லூரி செயல் இயக்குனர் ஆர்.சாம்சன் ரவீந்திரன், கல்லூரி முதல்வர் எம்.ரமேஷ், புல முதல்வர்கள் சண்முகம், நிர்மலா, இந்திய பொறியாளர் சேலம் அமைப்பின் செயலாளர் தவமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.





